தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு மீறல்: ரூ.16 கோடியை தாண்டியது அபராதம் - Covid19

சென்னை: அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை மீறியதாக சென்னையில் தற்போதுவரை ஏழு லட்சத்து 70 ஆயிரத்து 299 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 16 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 405 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Case report
Tamilnadu police

By

Published : Jun 30, 2020, 12:12 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவாமல் தடுக்கும்வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவை மீறுபவர்களை காவல் துறையினர் கண்காணித்து வழக்குகள் பதிவுசெய்து அவர்களைத் கட்டுப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 98 நாள்களில் காவல் துறை தடையை மீறியதாக ஏழு லட்சத்து 70 ஆயிரத்து 299 பேரை கைதுசெய்து பிணையில் விடுவித்துள்ளனர்.

ஐந்து லட்சத்து 78 ஆயிரத்து 854 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 16 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 405 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:காவலர்கள் தகாத சொற்களால் திட்டியதாக விசிக மாநில நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

ABOUT THE AUTHOR

...view details