சென்னை ஆவடி உட்பட திருமுல்லைவாயில் பகுதியில் தொடர்ச்சியாக செயின் பறிப்பு மற்றும் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துணை ஆணையர் ஜான் சுந்தர் மற்றும் திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவில் சோழம்பேடு சாலை, அய்யா கோயில் அருகில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தகேத்திற்கு இடமாக வந்த இருவர்கள் காவலர்களைக் கண்டதும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். காவல் துறையினர் இருவரையும் துரத்திப்பிடித்து விசாரணை செய்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட நபர்கள் கரூர் பகுதியைச் சேர்ந்த வீரப்பன்(44), ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(19) என்பதும் தெரிய வந்தது.