சென்னை:2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் தேவக்கோட்டையைச் சேர்ந்த கரிகாலன் முடியரசன், கமுதியைச் சேர்ந்த செல்வம் வழிவிட்டான், நாகர்கோவிலைச் சேர்ந்த அனிஷ் பீட்டர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த முத்துகருப்பன் உலகன், சுந்தரேசன் அம்மாசி, ராஜ்குமார் கணேசன், கருப்பையா மாயாண்டி, மதுரை மேலூரைச் சேர்ந்த கருப்பையா முனியாண்டி, கருப்பையா பிச்சன், பாண்டி அழகன், சேகர் சேவக மூர்த்தி, நடராஜன் அழகப்பன் மற்றும் தஞ்சாவூர் ஒரத்த நாட்டைச் சேர்ந்த துரைக்கண்ணு சின்னையன் ஆகியோர் தனியார் முகவர்கள் மூலமாக ஓமன் நாட்டிற்கு பல்வேறு வேலைகளுக்காகச் சென்றனர்.
ஆனால், ஓமன் நாட்டில் வேலைக்கு அழைத்தவர்கள் உறுதியளித்தபடி, வேலை, அதற்குரிய ஊதியம், போதுமான உணவு வழங்காமை மற்றும் தனி அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் ஓமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் 13 பேரையும் மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என, ஓமன் நாட்டில் உள்ளவர்களின் பெற்றோர், தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தனர்.