தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்; பாஜக புறக்கணிப்பு

நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைப்பெறுகிறது.

தமிழ்நாட்டில் இன்று கூடுகிறது அனைத்துக் கட்சிக் கூட்டம்; பாஜக புறக்கணிப்பு
தமிழ்நாட்டில் இன்று கூடுகிறது அனைத்துக் கட்சிக் கூட்டம்; பாஜக புறக்கணிப்பு

By

Published : Feb 5, 2022, 8:00 AM IST

சென்னை:நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, அடுத்த நடவடிக்கைகள் எடுப்பதற்கான அனைத்துக் கட்சிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை (பிப்.5) 11 மணியளவில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 2021ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இந்தச் சட்டமுன்வடிவை ஆளுநர் ஆர்.என். ரவி, பிப்.1ஆம் தேதி சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார். இந்நிலையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இதையும் படிங்க:நீட்: மாநிலங்களவையில் திமுக வெளிநடப்பு, மக்களவையில் காங்கிரஸ் கவனஈர்ப்பு தீர்மானம்

ABOUT THE AUTHOR

...view details