தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிலிப்பைன்சில் இருக்கும் இந்திய மாணாக்கரை தாயகம் அழைத்துவர கோரிக்கை

சென்னை: பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணாக்கர் இந்தியா திரும்புவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

tamilnadu-parents-asks-govt-to-bring-back-students-from-philippines
பிலிப்பைன்ஸில் தமிழ்நாடு மாணவர்களை இந்தியா அழைத்து வர பெற்றோர் கோரிக்கை!

By

Published : Mar 19, 2020, 10:11 AM IST

சென்னை ஆவடி சிரஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசலு. கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது மூத்த மகன் நித்தீஸ் (18) பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பர்ப்பிசோல் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்துவருகிறார். கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் நித்தீஸ் மட்டுமல்லாமல் அவருடன் இந்தியாவைச் சேர்ந்த 700 மாணாக்கர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் வீடியோ பதிவு

குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த 400 மாணாக்கர்களுக்கு அங்கு உணவு, தண்ணீர் முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவைகூட கிடைக்காமல் தவித்துவருகின்றனர். இதனால் அம்மாணாக்கரை உடனடியாக இந்தியாவிற்குப் பத்திரமாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்களின் பெற்றோர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கைவைத்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர்களில் ஒருவரான சீனிவாசலு கூறுகையில், "எனது மகன் நித்தீஸ் மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் சென்றார். அங்கு தற்போது கரோனா வைரஸ் பரவுவதால் மற்ற நாடுகளிலிருந்து படிக்கவந்த மாணவர்களை சொந்த நாட்டுக்குச் செல்லுமாறு பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்திருந்தது.

ஆனால் அங்கு விமான போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் மாணாக்கர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்.

சீனிவாசலு பேட்டி

இதையும் படிங்க:கோவிட்-19 எதிரொலி மலேசியாவில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க மனு!

ABOUT THE AUTHOR

...view details