தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்' - சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை: 'தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம்

By

Published : Mar 20, 2019, 10:42 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.

உள் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இருந்த நிலையில் இன்று முதல் வெப்பம் அதிகரிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் தமிழகத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை. சென்னையில் வானம் தெளிவாக காணப்படும். அதிகப்பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும், என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details