சென்னை: இதுதொடர்பாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.
விமானத்தில் விளையாட்டு... செந்தில் பாலாஜி கூறுவது யாரை? - TamilNadu politics
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சமீபத்திய ட்விட்டர் பதிவு, தற்போது அரசியல் மேடையில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
விதிமுறைகளின்படி பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கி, மீண்டும் சோதனைக்கு உள்ளாகி நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேரம் தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்புக் கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?” என கேள்வியெழுப்பியுள்ளார். இந்தப் பதிவு தற்போது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க:'தம்பி மல! பில்லு இன்னும் வரல..?' கரூரில் அண்ணாமலையை கலாய்த்து போஸ்டர்!