தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதியரசரின் உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்தும் ஆளுநர்- பேரவையில் அமைச்சர் மா சுப்பிரமணியன்

நீட் மசோதா குறித்து ஆளுநரின் கருத்து, உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்தும் ஆளுநர்!- சட்டப்பேரவையில் அமைச்சர் மா சுப்பிரமணியன்..
நீட் உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்தும் ஆளுநர்!- சட்டப்பேரவையில் அமைச்சர் மா சுப்பிரமணியன்..

By

Published : Feb 8, 2022, 12:51 PM IST

Updated : Feb 8, 2022, 1:11 PM IST

சென்னை:தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து, மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் வகையில் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வை அறிமுக காலத்திலிருந்தே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருவதாகவும், 142 நாட்களுக்குப் பின் சில காரணங்களைச் சுட்டிக் காட்டி சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு ஆளுநர் மசோதாவை அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.

மேலும், அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநர், குடியரசு தலைவருக்குத்தான் மசோதாவை அனுப்பி இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது சரியல்ல என்றும் கூறினார். குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தன்னிச்சையாக ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது சரியான முடிவல்ல” எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உயர்மட்ட குழு அவமதிப்பு

அமைச்சர் மா சுப்பிரமணியன் உரை

பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்து உரிய ஆய்வுக்கு பிறகே நீட் விலக்கு கோரலாம் என நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்ததுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஆளுநரின் கருத்து உயர்மட்டக்குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

நீட் விலக்கு மசோதா பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானது எனக் கூறிய அவர், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு நீட் தேர்வால் மருத்துவ படிப்பு என்பதே எட்டாக்கனியாக மாறியுள்ளதாகவும். வசதி படைத்தவர்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீட் தேர்வை எழுதுகிறார்கள், பழங்குடியின மக்கள் போன்ற நலிவுற்ற பிரிவினர் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற முடியாது எனவும் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பாமல், நீதிபதி குழு அறிக்கை பற்றி தனது கருத்தை ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனவும், கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உரியக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் குறைகூறுவது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புவதாக ஆளுநர் கூறுவதும், உச்சநீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி ஒரு சட்டப்பேரவை சட்டமே இயற்றக்கூடாது என்று ஆளுநர் தெரிவிப்பதும் ஏற்கத்தக்கது அல்ல எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:நீட் விவகாரத்தில் அரசியல் செய்யும் திமுக அதிமுக - பிரேமலதா விஜயகாந்த்

Last Updated : Feb 8, 2022, 1:11 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details