சென்னை:இந்தப் பயணம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, ’உலகளவில் புற்றுநோய் மிகப்பெரிய தொற்றுநோயாக உருவெடுத்து வருகிறது. தமிழ்நாட்டிலும் ஆண்டுதோறும் 70,000 முதல் 80,000 வரை புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் முற்றிலுமாக புற்றுநோயை குணமாக்க முடியும். உலகளவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் ஜப்பான் முன்னோடியாக திகழ்கிறது.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையானது (JICA), ஜப்பான் நாட்டில் செயல்படுத்தப்படும் புற்றுநோய் கொள்கைகள், ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு தமிழ்நாடு மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் கீழ் ஒரு குழுவினை ஜப்பானுக்கு அனுப்ப கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், முதலமைச்சர் இந்த பரிந்துரையை ஏற்றுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை தலைமையாகக் கொண்டு, மருத்துவத்துறையின் அரசு முதன்மைச்செயலாளர், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர், புற்றுநோய்க்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் சரவணன், ஆறுமுகம், உதவிபேராசிரியர் பிரசன்னா அடங்கிய குழுவை ஜப்பான் நாட்டுக்கு அனுப்ப ஆணையிட்டு, ஜப்பான் நாட்டு புற்றுநோய் கொள்கை குறித்த செயல்பாடு, மருத்துவ கட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் அரசு மருத்துவர்களை ஜப்பான் நாட்டுக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றினை விரிவாக ஆராய்ந்து பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு வழங்க உத்தரவிட்டார்கள்.
முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 5 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்று அங்கு நாளை முதல் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை தலைமையகம் சென்று – உயர் அலுவர்களுடன் ஆய்வுக்கூட்டம், மருத்துவம் மற்றும் தொழிலாளர் நலஅமைச்சர் தலைமையிலான குழுவுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல், தேசிய அளவில் மாநிலம், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள புற்றுநோய் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பார்வையிடுவது என்கின்ற வகையில், ஜப்பான் தேசிய புற்றுநோய் மையம் – மருத்துவ கட்டமைப்பு பார்வையிடுதல், டோக்கியோ மாநகராட்சி மேயர் அவர்களை சந்தித்தல் மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை பார்வையிடுதல், ஹச்சியோஜி நகராட்சி – மருத்துவ கட்டமைப்பு பார்வையிடுதல்.