தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 670 ஆக குறைவு

தமிழ்நாட்டில் மொத்தம் கரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 670 என குறைந்துள்ளது. அதே நேரத்தில், இன்று 58 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Mar 19, 2022, 10:32 PM IST

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 36 ஆயிரத்து 285 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 58 நபர்கள் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை இதுவரை 6 கோடியே 40 லட்சத்து 55 ஆயிரத்து 20 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 34 லட்சத்து 52 ஆயிரத்து 344 நபர்கள் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்பது தெரியவந்தது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 670 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 118 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 639 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக புதிதாக நோய் தொற்றால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை பதிவாகாமல் உள்ளது. இன்றும் பூஜ்யம் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னையில் 24 நபர்களுக்கும், கோயம்புத்தூர், திருவள்ளூரில் தலா 4 நபர்களுக்கும் , காஞ்சிபுரம், நீலகிரியில் தலா மூன்று நபர்களுக்கும், கடலூர், கன்னியாகுமரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தென்காசி, திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை.

இதையும் படிங்க: வெற்று பட்ஜெட்டை தாக்கல் செய்து மக்களை ஏமாற்றும் திமுக - அண்ணாமலை விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details