தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் தற்போது 475 பேர் மட்டுமே! - தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் 475 பேர்

தமிழ்நாட்டில் இன்று 41 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 475ஆக குறைந்துள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Mar 24, 2022, 10:25 PM IST

சென்னை:பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று மார்ச் 24ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், ’தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 31 ஆயிரத்து 979 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் இருந்த 40 நபர்களுக்கும், சிங்கப்பூரிலிருந்து வந்த ஒருவருக்கும் என 41 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 42 லட்சத்து 13 ஆயிரத்து 592 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 34 லட்சத்து 52 ஆயிரத்து 575 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 475 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 71 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 75 என உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை.

சென்னையில் புதிதாக 13 பேருக்கும், செங்கல்பட்டில் 6 நபர்களுக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 22 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலகக் கண்காட்சியில் பங்கேற்க துபாய்க்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details