மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஜுன்.13) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1 லட்சத்து 68 ஆயிரத்து 663 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 14 ஆயிரத்து 14 நபர்களுக்கும், பக்ரைன் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவருக்கும் என, மொத்தம் 14,016 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 92 லட்சத்து 5 ஆயிரத்து 623 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 23 லட்சத்து 53 ஆயிரத்து 721 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 927 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், மேலும் 25 ஆயிரத்து 895 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 74 ஆயிரத்து 247 என, உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 80 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 187 நோயாளிகள் என, மொத்தம் 267 நோயாளிகள் இறந்தனர்.
தற்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 547 என உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் 935 ஆக குறைந்துள்ளது.
கோயம்புத்தூரில் 1,895 நபர்களும், ஈரோட்டில் 1,323 நபர்களும், சேலத்தில் 855 நபர்களும், திருப்பூரில் 820 நபர்களும், தஞ்சாவூரில் 615 நபர்கள் என, அதிக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 9,140 பேரும், கோயம்புத்தூரில் 17 ஆயிரத்து 617 பேரும், ஈரோட்டில் 11,371 பேரும், சேலத்தில் 8,754 பேரும், திருப்பூரில் 15,825 பேரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 5,25,009
கோயம்புத்தூர் - 2,03,540
செங்கல்பட்டு - 1,51,228
திருவள்ளூர் - 1,07,734
சேலம் - 79,352
திருப்பூர் - 74,582
ஈரோடு - 76,260
மதுரை - 70,097
காஞ்சிபுரம் - 68,174
திருச்சிராப்பள்ளி - 65,052
தஞ்சாவூர் - 57,834
கன்னியாகுமரி - 56,375
கடலூர் - 54,877
தூத்துக்குடி - 52,365
திருநெல்வேலி - 46,538