தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.
இதனால், திமுக உள்பட பிற கட்சியினர் உள்ளாட்சித் தேர்தலைத் தமிழகத்தில் உடனடியாக நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழகத்தில் விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என கூறியிருந்தார். அதேபோல் தற்போது மாநிலத் தேர்தல் ஆணையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்கும் பணி அக்டோபர் 15இல் முடிவடையும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல்: ஸ்டாலின் பரப்புரை தேதி அறிவிப்பு!