சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் அதிகமான அளவில் இளம் பெண்களும், இளம் வேட்பாளர்களும் போட்டியிட்டனர். அரசியல் கட்சி சார்பாகக் களம்கண்ட வேட்பாளர்களைத் தாண்டி சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். இந்நிலையில் கணிசமான அளவில் இளம் வேட்பாளர்கள் வெற்றியும் அடைந்துள்ளனர்.
திமுக சார்பில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 136ஆவது வார்டில் 22 வயதுக்குள்பட்ட இளம் வேட்பாளராக நிலவரசி துரைராஜ் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். இவரின் தந்தை திமுகவைச் சேர்ந்தவர் ஆவார். நிலவரசி துரைராஜ் முதலமைச்சர் ஸ்டாலினை முன்மாதிரியாகக் கொண்டு அரசியலுக்கு வந்தேன் என்று கூறியிருந்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சி வார்டு எண் 5இல், 22 வயது இளம் வேட்பாளர் சினேகா சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பி.இ. பட்டதாரியான இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.