தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022 முடிவுகள்
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022 முடிவுகள்

By

Published : Feb 22, 2022, 7:17 AM IST

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல்,21 மாநகராட்சிகளுக்கும்,138 நகராட்சிகளுக்கும்,439 பேரூராட்சிகளுக்கும் கடந்த பிப்.19 அன்று நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, கடந்த பிப்.19 அன்று 31,150 வாக்குச்சாவடிகளில் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவுகள் நடந்துமுடிந்தது.மொத்தம் 60.70 விழுக்காடு வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 விழுக்காடு வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக சென்னையில்,43.59 விழுக்காடு வாக்குகள் பதிவானது.

இதில்,7 வாக்குச்சவடிகளில் சில பிரச்சனைகள் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டன.அப்படி நிறுத்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பிப்.21 அன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி வார்டு எண் 51, வண்ணாரப்பேட்டை வார்டு எண் 179, ஓடைக்கும்பம் பெசன்ட் நகர், திருவண்ணாமலை நகராட்சி வாக்குச்சாவடி எண் 57 M, 57 F, மதுரை திருமங்கலம் நகராட்சி வாக்குச்சாவடி எண் 17W, அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி வாக்குச்சாவடி எண் 16M, 16F ஆகியவற்றில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை பிப்.22 இன்று நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இதையும் படிங்க:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்...

ABOUT THE AUTHOR

...view details