தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 மணிக்கு கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளான இன்று சூற்றுச்சுழல், வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை

By

Published : Jul 1, 2019, 7:34 AM IST

Updated : Jul 1, 2019, 10:09 AM IST

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 28ஆம் தேதி தொடங்கியது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதன்பிறகு திமுக சார்பில் தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பதில் அளிக்க உள்ளார்.

இதையடுத்து, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவதாம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்று பேச உள்ளனர். அப்போது, முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதிலளிக்க உள்ளார்.

அந்த நேரத்தில் வனத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Jul 1, 2019, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details