தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆளுநரை அமர வைத்துக்கொண்டு முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது" - ஈபிஎஸ்! - ஸ்டாலின் பேசியது மரபுக்கு எதிரானது

சட்டப்பேரவையில் ஆளுநரை அமர வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இதுபோல பேசியது மரபுக்கு எதிரானது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

TamilNadu
TamilNadu

By

Published : Jan 9, 2023, 5:17 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது உள்ளிட்ட சொற்களை தவிர்த்திருந்தார். அவர் உரை முடிந்த பிறகு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். அதேபோல், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவை நிகழ்வுகள் முடியும் முன்னதாகவே பேரவையில் இருந்து கிளம்பினார். ஆளுநர் கிளம்பியதும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரை சம்பிரதாய உரையாக இருப்பதாகவும், எந்தவித பெரிய திட்டங்களும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார். ஆளுநர் உரை வெற்று உரையாக, ஏமாற்றம் அளிக்கும் வகையிலும் இருப்பதாகவும் விமர்சனம் செய்தார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் ஆளுநரை அமர வைத்து, முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் மரபுக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அம்பேத்கரின் பெயரையே வாசிக்க மறுத்திருக்கிறார்.. ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது - சபாநாயகர்

ABOUT THE AUTHOR

...view details