தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்குகிறது.

TN Assembly: ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது
TN Assembly: ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது

By

Published : Jan 9, 2023, 7:00 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2023ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.9) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரை வாசிப்பார்.

அதில், மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இதனையடுத்து ஆளுநரின் உரையை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தமிழில் வாசிப்பார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆளும் கட்சிகள், எதிர்கட்சிகள் முன்னிலையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்படும்.

அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை, தமிழ்நாடு - தமிழகம் தொடர்பாக ஆளுநர் உடனான கருத்து மோதல் ஆகியவை சட்டப்பேரவையில் எவ்வாறு பிரதிபலிக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:‘தமிழர்களின் வரலாற்றில் மூக்கை நுழைக்கிறார் ஆளுநர்’ - எம்பி கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details