தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைக்கால நிதிநிலை அறிக்கை: பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன் - தங்க நகைக்கடன் தள்ளுபடி

சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்
சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்

By

Published : Feb 26, 2021, 11:00 AM IST

Updated : Feb 26, 2021, 11:59 AM IST

11:55 February 26

விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி - முதலமைச்சர்

11:47 February 26

தங்க நகைக்கடன் தள்ளுபடி - இபிஎஸ்ஸின் தொடரும் அறிவிப்புகள்

கூட்டுறவு வங்கிகளில் உழவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.அதில், ஆறு சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடிசெய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழு பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என 110 விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

11:20 February 26

எதிர்க்கட்சிகள் இல்லா சட்டப்பேரவை உருவாகும்

வரும்காலத்தில் எதிர்க்கட்சிகள் இல்லா சட்டப்பேரவைை உருவாகும் என ஓ.எஸ். மணியன் பேரவையில் பேச்சு.

இது குறித்து அவர், "எதிர்க்கட்சிகளுக்கு எதிர்காலத்திலும் இங்கு இடமில்லை, எதிர்க்கட்சியின் தோல்வி தற்போது தெரிந்துவிட்டது, மக்கள் பிரச்சினை பற்றி பேரவையில் பேசாமல் புறக்கணித்துவிட்டனர்.

மக்கள் வருகின்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளைப் புறக்கணிப்பார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்குத் தேவையானவற்றை முறையாகச் செய்து அதற்கான ஆணையை வெளியிட்டுவருகிறார். இதனால் தமிழ்நாட்டில் தற்போது எதிர்க்கட்சிக்கு வேலை இல்லை" என்று தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் நரசிம்மன் எழுப்பிய கேள்விக்கு, திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு ஒன்றியம் குமாரமங்கலம் கிராமத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் நிறைவுபெற்றுள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் பதிலளித்தார்.

11:12 February 26

மின்வெட்டு என்பதை திருத்திக்கொள்ளவும்

மின் தடை காரணமாக மின்சாரம் எங்காவது தடைப்பட்டிருக்கலாம். மின்வெட்டு என்று எம்எல்ஏ பரமேஸ்வரி பேசியதற்கு அமைச்சர் தங்கமணி விளக்கம். 

மின்வெட்டு என்று தவறாகச் சொல்ல வேண்டாம் என்றும், எம்எல்ஏவுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மின்வெட்டு என்று எம்எல்ஏ பேசியதைத் திருத்திக்கொள்ளுமாறும் சபாநாயகரிடம் அமைச்சர் கோரிக்கைவிடுத்தார்.

மீண்டும் அதிமுக ஆட்சி

ஒவ்வொரு நாளும் பல்வேறு அறிவிப்புகள் மூலம் முதலமைச்சர் அடிக்கும் பந்துகளால் எதிரிகள் கலங்கிப்போய் உள்ளார்கள் என்றும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கப்போவது உறுதி எனவும் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

10:02 February 26

சட்டப்பேரவையில் நேற்று (பிப். 25) முதலமைச்சர் 110 விதியின்கீழ் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இன்றும் சட்டப்பேரவையில் 2021- 2022ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் 110 விதியின்கீழ் முக்கிய அறிவிப்புகளை இன்று  வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி நாளான நாளைய தினம் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்திற்குப் பதிலுரை அளிக்கப்படும்.

இதையடுத்து 2021-2022ஆம் ஆண்டின் செலவினங்களுக்கான முன்பண மானியக்கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடைபெறும்.

Last Updated : Feb 26, 2021, 11:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details