தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் பல்வேறு துறை செயலர்கள் மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை! - transport department

சென்னை : தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை செயலர் உட்பட பல்வேறு துறை செயலர்களை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.

tamilnadu-ias-officer-transfer
tamilnadu-ias-officer-transfer

By

Published : Feb 7, 2020, 10:41 AM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வித்துறை செயலராக இருந்த பிரதீப் யாதவ் கைத்தறி துறை செயலராகவும், கைத்தறி துறை செயலராக இருந்த குமார் ஜெயந்த் அயல்நாட்டு வேலை அளிப்பு நிறுவன மேலாண்மை இயக்குநராகவும் மாற்றப்பட்டனர்.

போக்குவரத்துத்துறை செயலர் சந்திர மோகன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலராகவும், அயல்நாட்டு வேலை அளிப்பு நிறுவன மேலாண்மை இயக்குநராக இருந்த தர்மேந்திரா பிரதாப் யாதவ் போக்குவரத்துத்துறை செயலராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேபாட்டுத்துறை செயலர் தீரஜ் குமார் பள்ளிக் கல்வித்துறை செயலராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையை இவர் கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம் துறை முதன்மைச் செயலர் கார்த்தி எரிசக்தி துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :முகாந்திரம் இருப்பதால் விஜய் வீட்டில் சோதனை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

ABOUT THE AUTHOR

...view details