தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 7, 2020, 7:54 PM IST

ETV Bharat / state

மனித உரிமைகள் சங்கங்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு: மனித உரிமைகள் ஆணையம்!

சென்னை: மனித உரிமைகள் என்ற பெயரில் செயல்படும் சங்கங்கள் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு டி.ஜி.பி.,க்கும், பதிவுத்துறை ஐ.ஜி.க்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்
மனித உரிமைகள் ஆணையம்

சங்கங்கள், அமைப்புக்களின் பெயரில் மனித உரிமைகள் என்ற பெயரை பயன்படுத்த தடை விதித்து, சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் 2010ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், சர்வதேச மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயர்களில் சங்கங்கள் பதிவு செய்து, பதிவு எண்ணுடன் பெரிய அளவில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், கட்டப்பஞ்சாயத்து நடத்தி அப்பாவி மக்களிடம் பணம் பறித்தும், அலுவலர்களை மிரட்டியும் வரும் இந்த அமைப்புக்களுக்கு எதிராக விசாரணை நடத்தி, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு டி.ஜி.பி, பதிவுத்துறை ஐ.ஜி.க்கு மனித உரிமைகள் ஆணைய பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details