தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு தக்க சமயத்தில் கைகொடுத்த தமிழர் - நெகிழ்ந்து போன பாக் வீரர்கள்! - ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள்

சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பிசியோதெரபிஸ்டாக சென்னையைச் சேர்ந்த தமிழக ஹாக்கி அணியின் பிசியோதெரபிஸ்ட் ராஜ்கமல் இணைந்துள்ளார். தமிழரான ராஜ்கமல் எந்தவித பாகுபாடுமின்றி தங்களது உதவியுள்ளதாக பாகிஸ்தான் அணியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

HOCKEY
பாகிஸ்தான்

By

Published : Aug 6, 2023, 9:55 PM IST

சென்னை: ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. இப்போட்டி, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இந்த ஹாக்கி போட்டி வரும் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கிப் போட்டி நடைபெறுவதால் ஹாக்கி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த தொடரில் நடப்பு சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. மேலும், 25 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் இந்திய - பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் மோதவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாக ஹாக்கி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை நடைபெற்ற போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் மலேசியா முதல் இடத்திலும், தென் கொரியா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும், ஜப்பான், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

இதனிடையே சென்னைக்கு வந்த பாகிஸ்தான் அணிக்கு, அவர்களுடன் வர வேண்டிய பிசியோதெரபிஸ்ட்(Physiotherapist) விசா பிரச்சினை காரணாமாக பாகிஸ்தான் அணியின் பிசியோதெரபிஸ்ட் வரவில்லை. இதனால் தவித்துப்போன அந்த அணியினர், தங்களின் இக்கட்டான நிலை குறித்து தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனத் தலைவரிடம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ஹாக்கி அணியின் சூழ்நிலையை புரிந்து கொண்ட தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனம் விரைவாக செயல்பட்டு தமிழக அணியில் உடற்பயிற்சியாளராக இருக்கும் ராஜ்கமல் என்ற பிசியோதெரபிஸ்ட் நிபுணரை பாகிஸ்தான் பிசியோதெரபிஸ்ட் உடற்பயிற்சி நிபுணராக பணிபுரிய அனுமதி அளித்திருக்கிறது.

நடந்து முடிந்த டிஎன்பிஎல் லீக் தொடரில் ராஜ்கமல் நெல்லை அணிக்காக உடற்பயிற்சியாளராக பணிபுரிந்தவர். அவரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல், பாகிஸ்தான் வீரர்களுக்கு உடற்பயிற்சியாளராக பணிபுரிய சம்மதம் தெரிவித்தார். பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் போட்டிக்கு ஒரு நாள் முன்பு ராஜ்கமல் அந்த அணியின் உடற்பயிற்சியாளராக இணைந்தார். பாகிஸ்தான் வீரர்கள் என்று பார்க்காமல் அவர் ஆற்றிய பணிகள், பாகிஸ்தான் அணி வீரர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. ராஜ்கமல் தங்களுக்கு மிகப் பெரிய உதவியைச் செய்ததாகவும், கடவுளால் அனுப்பப்பட்ட நபராகவே அவரை கருதுவதாகவும் பாகிஸ்தான் ஹாக்கி அணி வீரர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Asian Champions Trophy: மலேசியாவை வீழ்த்திய சீனா.. டிராவில் முடிந்த இந்தியா - ஜப்பான் ஆட்டம்

ABOUT THE AUTHOR

...view details