தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பணியாளர்கள் கைது!

சென்னை: நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் இரண்டாம் நாளாக இன்றும் நடைபெற்றது.

உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பணியாளர்கள் கைது

By

Published : May 29, 2019, 12:54 PM IST

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றுவதற்காக ஆணை வழங்க வேண்டும் என சாலைப் பணியாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

சாலை பணியாளர்கள் தங்களுடைய ஊதிய மாற்றத்தை நிரந்தர புதிய நடைமுறையில் கொண்டுவருவது தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சரிடம் கடந்த 2017ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்திலும், இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 13 ஆண்டுகாலமாக பணி வழங்காமல் இருப்பதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலும் சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுவரை இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கு பெற்றவர்களை காவல் துறையினர் கைது செய்து அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பணியாளர்கள் கைது

நேற்று( செவ்வாய்கிழமை) மாலை ஏழு மணிக்கு மேல் காவல் துறையினர் அவர்களை விடுவித்த பிறகும், கலைந்து செல்ல மறுத்து உள்ளேயே அமர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று காலையும் அவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details