இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிபயங்கர அனல் காற்று வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை - வானிலை மையம்ஞ
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனல் காற்று
தற்போது, குறிப்பிட்டு கூறக்கூடிய அளவில் மழை இல்லை. இன்றும் நாளையும் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.