தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்திவைப்பு! - கரோனா நோய் தொற்று பரவல்

சென்னை: கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு நடைமுறைகள் நிறுத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

TamilNadu Govt
TamilNadu Govt

By

Published : Oct 8, 2020, 6:56 PM IST

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்திவைக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஞானத்தமிழ் குறுகியகால படிப்பை அறிமுகம் செய்துள்ள திறந்தநிலைப் பல்கலைக் கழகம் !

ABOUT THE AUTHOR

...view details