தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.35.82 கோடி மதிப்புள்ள அரசு கட்டுமானப்பணிகளைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் 35.82 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கட்டுமானப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூபாய் 35.82 கோடி மதிப்பிலான அரசு கட்டுமானப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர்
ரூபாய் 35.82 கோடி மதிப்பிலான அரசு கட்டுமானப்பணிகளை திறந்து வைத்தார் முதல்வர்

By

Published : May 13, 2022, 3:51 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (13.5.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் 35.82 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 சேமிப்புக் கிடங்குகள், அலுவலகக் கட்டடம் மற்றும் விருந்தினர் அறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியக் கிடங்குகளின் கொள்ளளவை உயர்த்தும் வகையிலும், சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைக்கும் வகையில் அரசின் சார்பில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.


அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் ரூபாய் 25 கோடி செலவில் மொத்தம் 12000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 சேமிப்பு கிடங்குகள். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூர் கிராமத்தில் 2 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள். ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், இச்சிபாளையம் கிராமத்தில் 3 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், நாதேகவுண்டம்பாளையம் கிராமத்தில் 4 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 3000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள்.


தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு சொந்தமான திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், விளமல் கிராமத்தில் உள்ள சேமிப்பு கிடங்கு வளாகத்தில் ரூபாய் 77 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கு அலுவலகக் கட்டடம் மற்றும் விருந்தினர் அறை என மொத்தம் ரூபாய் 35.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கட்டுமானப்பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: வேளாண்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இந்த அரசு அனுமதிக்காது - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details