தமிழ்நாடு அரசின் சார்பாக இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் விதமாகத் தமிழ்நாடு முழுவதும் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருநின்றவூர் அருகே தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் முகாமுக்காக வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 80 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இளம் விஞ்ஞானிகளை உருவாக்க பயிற்சி முகாம் - திருவெற்றியூர்
சென்னை: இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் விதமாகத் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் தனியார் கல்லூரி இணைந்து நடத்தும் பயிற்சி முகாமுக்கான தொடக்க விழா திருநின்றவூரில் நடைபெற்றது.
![இளம் விஞ்ஞானிகளை உருவாக்க பயிற்சி முகாம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3172977-thumbnail-3x2-edu.jpg)
தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களுக்கு 15 நாட்கள் தொடர் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இதில் வேதியியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், உயிர் தொழில் நுட்பவியல், இயற்பியல், கணிதவியல் பயிற்சிகள் போன்றவை அடங்கும்.
இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப துறையின் உறுப்பினர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு அரசு இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட வாரியாக பல லட்சம் ஒதுக்கப்படுகிறது. நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை படைக்க வேண்டும்" என்றார்.
TAGGED:
திருவெற்றியூர்