சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலில் இன்று (நவ 3) காலை 7 மணிக்கு டெல்லி செல்ல இருந்தார். ஆனால் திடீரென நேரம் மாற்றப்பட்டு காலை 10.35 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இதனிடையே தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் - RN Ravi visit Delhi
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்கு சென்றுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
இந்த நிலையில் இன்று இரண்டு நாள் பயணமாக ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் டெல்லி சென்றுள்ள ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் முக்கிய அரசு அலுவலர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி கடிதம் - டி.ஆர்.பாலு அழைப்பு