மத்திய தேர்வாணையக் குழுவால் (Union public Service Commision) 2020ஆம் ஆண்டு நடத்தப்படும் இந்திய குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு நடத்தவுள்ளது. இதற்கான அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தினை (All India Civil Services Coaching Centre) சென்னையில் அமைத்துள்ளது.
- இந்தப் பயிற்சியில் சேர விருப்பம் உடையவர்கள் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளமான http://www.civilservicecoaching.com/இல் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
- பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடையவர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
- தேர்விற்கான நுழைவுச்சீட்டினை பயிற்சி மையத்தின் இணைய பக்கத்தில் அக்டோபர் மாதம் ஏழாம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- அக்டோபர் 13ஆம் தேதி, தமிழ்நாட்டில் 13 மையங்களில் நுழைவுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்விற்கான மையத்தை தேர்வர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
பயிற்சியில் இணைவதற்கான கல்வித் தகுதிகள்
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரிகளிலிருந்து இளநிலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களின் வயது 01.08.2020 அன்று, அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது 21ஆக இருக்கவேண்டும். இதர வகுப்பினர் 32 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்கள் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பயிற்சி நேரம்
- முழுநேரப் பயிற்சி காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிவரை
- பகுதிநேரப் பயிற்சி சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் முழு நேரமும், வார நாட்களில் மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை