சென்னை:இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தொழிலாளர் தினமான மே 1இல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையைப் பின்பற்றி மே 1ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை மதச் சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக் கூடாது. கூட்டம் நடக்கும் இடத்தை, மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
2022ஆம் ஆண்டுக்கு முன்பு, கிராம சபைக் கூட்டமானது குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி, மே தினமான மே 1ஆம் தேதி, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி மற்றும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதி உள்ளிட்ட நான்கு நாட்கள் கூட்டப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘இனி ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும்’ என சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.