சென்னை:தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (ஜன.27) ஆணை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்களை சோதனை அடிப்படையில் விற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து சிறு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.