தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2020, 6:00 PM IST

ETV Bharat / state

கடன் தொகை செலுத்த மூன்று மாதம் அவகாசம் - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக கடன் தவணைத் தொகையை செலுத்த ஜூன் 30ஆம் தேதி வரை மூன்று மாதம் அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதில், கூட்டுறவு நிறுவனங்களில் பயிர் கடன் செலுத்த விவசாயிகளுக்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சிப்காட் நிறுவனத்துடன் மென்கடன் பெற்றுள்ள நிறுவனங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மீனவ, கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கடன் உதவிகளுக்கான தவணைத் தொகை செல்லுத்த மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் பெற்றுள்ள சிறு, குறு, நடுத்தர கடன் தவணைகளை செலுத்த மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவு சூழ்நிலையில் வாடகை வீட்டில் குடியிருப்போரிடம் மார்ச், ஏப்ரல் வாடகையை இரண்டு மாதம் கழித்து பெற்றுக் கொள்ளுமாறு வீட்டின் உரிமையாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 7 கோடி மக்களைக் காப்பாற்றுமளவிற்கு தமிழ்நாடு அரசிடம் நிதியுள்ளதா?

ABOUT THE AUTHOR

...view details