தமிழ்நாட்டில் கரோனா முதல் அலையைவிட, இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை தமிழ்நாடு அரசே ஏற்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் படிப்பு முடியும் வரை, அவர்களின் கல்விச் செலவை ஏற்பது எனவும்; அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவது குறித்தும் தமிழ்நாடு அரசு பரீசிலித்து வருவதாகக் கூறப்படுகிறது.