சென்னை: தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதில் ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் ஆவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்
முன்னதாக மதன் பி லோகூர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, நீலகிரியில் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, யானைகள் வழித்தடத்திலுள்ள கட்டடங்கள் மற்றும் ரிசார்ட்டுகளை உடனடியாக நீக்கக்கோரி உத்தரவிட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் கூறியிருந்தது.