தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து வகையான தேர்வுகளுக்கும் கல்வித் தகுதியின் அடிப்படையில் பாடத்திட்டத்தை மாற்றி கடந்தாண்டு தேர்வாணையம் வெளியிட்டது. இந்தாண்டு குரூப்-1 பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு வரும் 20ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குரூப்-1 தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கான பாடத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்திய புவியியல் அமைப்பு, இந்திய வரலாறு, கலாசாரம், இந்திய அரசியல் அமைப்பு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், மனத்திறன் சோதனை தேர்வு ஆகியவை கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்தது போல் இந்த ஆண்டும் இடம்பெற்றுள்ளன.