கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொழில் நிறுவனங்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், அமைப்புசார தொழிலாளர் நலனுக்காக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகத்தை நேரில் சந்தித்து, இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.