சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமனம் செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவை தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி கேட்ட கேள்விகளுக்கான விளக்கம் தயார் செய்யப்பட்டு, ஆளுநர் மாளிகைக்குத் தமிழ்நாடு அரசு இன்று (31.08.2023) அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட தன்னாட்சி அமைப்பாகும். இதன் தலைவராகப் பதவி வகித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தலைவராகச் செயல்பட்டு வந்தார். அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தலைவர் பதவி நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. எனவே 4 உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் ஐஏஎஸ் (ஓய்வு), பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த சைலேந்திர பாபு, கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கான தமிழ்நாடு அரசு உயர்மட்டக் குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.
இதையும் படிங்க:"ஆட்சி மாற்றத்திற்கு பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை பச்சோந்தி போல் செயல்படுகிறது" - ஓபிஎஸ் வழக்கில் நீதிபதி காட்டம்