தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் புதிய சின்னமாகிறது பட்டாம் பூச்சி - new symbol

சென்னை: தமிழ்மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் புதிய சின்னமாகிறது பட்டாம் பூச்சி

By

Published : Jun 30, 2019, 8:39 PM IST

Updated : Jul 1, 2019, 2:01 PM IST

தமிழ்நாட்டு அரசு சின்னங்களாக திருவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம், வரையாடு, மரகதப்புறா, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகியவை உள்ளன. இந்நிலையில், தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தை (அறிவியல் பெயர்: சிற்றோ சோர்ரா தைஸ்) தமிழ்நாடு சின்னமாக அறிவிக்க முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

அந்தப் பரிந்துரையை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு, தற்போது தமிழ்மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து சுற்றுச்சூழல், வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் புதிய சின்னமாகிறது பட்டாம் பூச்சி
Last Updated : Jul 1, 2019, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details