தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தப்லிஹி ஜமாத் சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்ஒவ்வொரு குடிமகனின் ஆராேக்கியமும் நமக்கு முக்கியமே கடந்த மார்ச் மாதம் 8 ந் தேதி முதல் 20 ம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களில் பெரும்பாலோருக்கு கெரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட யாரேனும் இதுவரை கரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளவில்லையெனில்உடனடியாக சுகாதாரத்துறையின் உதவிமைய எண்களான 7824849263, 044 4627441 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.