பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அரசாணை வெளியாகியுள்ளது.
அதில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்கால மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அரசுப்பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போனஸ் வழங்காததை கண்டித்து டான்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை