முதலமைச்சர் முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! - 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
08:07 May 27
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் முதலீடுகளுக்கு 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெர்மனி, ஜப்பான், சீனா, ஃபிரான்ஸ், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுகளுக்கு 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளன.
அதில் ஒன்பது நிறுவனங்கள் நேரடியாகவும், எட்டு நிறுவனங்கள் காணொலி வாயிலாகவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பூ