தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு? தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Rajeev ranjan meeting
ராஜீவ் ரஞ்சன்

By

Published : Apr 16, 2021, 3:52 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டுகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

அதனை கட்டுப்படுத்த அதிக அளவில் பரிசோதனை, தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவது, அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்குவது, கரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பது, முகக்கவசம், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கத் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறைச் செயலர், வருவாய்த்துறை ஆணையர், உள்துறை செயலர், காவல் உயர் அலுவலர்கள், மருத்துவ நிபுணர் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று (ஏப்.16) மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details