தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Etv Bharat 2022 roundup: தமிழ்நாடு வனத்துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்! - elephant in varisu shooting

இந்தாண்டு தமிழ்நாடு வனத்துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

வனத்துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
வனத்துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

By

Published : Dec 28, 2022, 9:03 AM IST

Updated : Dec 28, 2022, 9:47 AM IST

மனித-விலங்கு மோதல்கள்:தமிழ்நாடு வனத்துறையில் இந்த வருடம் தொடங்கிய போதே மனித-விலங்கு மோதல்கள் அதிகமாகவே இருந்தது. யானைகளும் சிறுத்தைகளும் நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து மக்களை கொன்றது. விலங்குகளுடனான மோதலில் மனித உயிரிழப்புகளை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 152ஆக உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இதே போல மின்சாரம் தாக்கி தமிழ்நாட்டில் 34 யானைகள் உயிரிந்துள்ளன.

மனித வனவிலங்கு மோதலுக்காக முக்கிய காரணங்களாக வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும் காரணிகள், வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, வன விலங்குகளை விவசாய நிலங்களுக்கு ஈர்க்கும் பயிர் முறைகளை மாற்றுதல், வனப் பொருட்களை சட்டவிரோதமாக சேகரிப்பதற்காக மனிதர்கள் காடுகளுக்கு செல்வது, காடுகளை ஆக்கிரமிப்பு செய்தல் உள்ளிட்டைவையாகும்.

காடுகளின் பரப்பளவை உயர்த்த முயற்சிகள்:தமிழ்நாட்டில் தற்போது உள்ள காடுகளின் பரப்பளவு 23.3 விழுக்காடாக உள்ளது. இதனை 33 விழுக்காடாக உயர்த்த அரசும் வனத்துறையும் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்று நடுதல் விழா நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் அமைச்சகம் வன ஆய்வு மூலம், தொகுக்கப்பட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் இந்திய வன ஆய்வு (FSI) அறிக்கையை வெளியிட்டது.

இந்த அறிக்கையில் தமிழ்நாட்டை பொருத்தவரை 55 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வரை காடுகள் விரிவடைந்துள்ளது, வனப்பகுதி மற்றும் வனப் பகுதிக்கு வெளியே உள்ள அனைத்து மரங்களையும் சேர்த்து 113 சதுர கிலோமீட்டர் உயர்ந்துள்ளது. இருப்பினும், ஒரு ஹெக்டேருக்கு குறைவான திட்டுக்களும் காணப்படுகின்றன. அதேசமயம் 406 சதுர கிலோமீட்டர் மரங்களையும் இழந்ததுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய புலிகள் காப்பகம்:தமிழ்நாட்டில் ஏற்கனவே நான்கு புலிகள் காப்பகங்கள் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை வனப்பகுதிகளை புலிகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்தது. கடந்தாண்டு அறிவிக்கப்பட்டாலும் இந்த ஆண்டுதான் இதற்கான கள இயக்குனர் நியமிக்கப்பட்டு புலிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய வன விலங்கு சரணாலயங்கள்:கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு 17ஆவது புதிய சரணாலயமாக காவிரி தெற்கு வன விலங்குகள் சரணாலயத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டது. இந்த சரணாலயம் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சுற்றியுள்ள காவிரி தெற்கு பகுதிகளில் உள்ள 686.405 சதுர கிலோ மீட்டர் பாதுகாக்கப்பட்ட காடுகளாகவும், அந்தப் பகுதி வன விலங்குகள் சரணலாயமாகவும் அறிவிக்கப்பட்டது.

அதிக ராம்சார் இடங்கள்:தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 14 ராம்சர் தளங்களுடன் இந்தையாவில் முன்னணியில் உள்ளது. இது இயற்கை ஆர்வலர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், வனத்துறை இந்த இடங்களை பாதுகாக்க தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

அமைச்சர் முதல் உயர் அதிகாரிகள் மாற்றம்: திமுக ஆட்சி பொறுப்பற்ற பிறகு வனத்துறை அமைச்சராக கே. ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. இதில் ராமச்சந்திரனுக்கு சுற்றுலா துறை ஒதுக்கப்பட்டு, இந்த பொறுப்பில் இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதே போல இரண்டு புலிகள் காப்பகங்களுக்கு (சத்தியமங்கலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை) கடந்த ஆறு மாதங்களாக கள இயக்குனர்கள் நியமிக்கப்படாத நிலையில் கடந்த மாதம் இரண்டு கள இயக்குனர்களை நியமனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வனத்துறையில் நடந்த பரபரப்பான சம்பவங்கள்:

  • விஜய் நடித்த வாரிசு படப்பிடிப்பில் இரண்டு யானைகளை திருச்சியிலிருந்து கஜ பூஜைக்கென கொண்டு வந்து, சட்டத்திற்கு புறம்பாக படப்பிடில் பயன்படுத்திய நிகழ்வு தமிழகம் முழுவதும் பேசப்பட்டது.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் யானையை பாகன் துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. அதை தொடர்ந்து இந்த யானை அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது என பேசப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வன அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து, யானையை பார்த்து அதனை திரும்ப அஸ்ஸாம் மாநிலத்துக்கே கொண்டு போக ஏற்பாடு செய்தனர். இருப்பினும், தமிழ்நாடு அரசு யானையை அரசு திருப்பி அனுப்ப மறுத்தனர்.
  • கடந்த ஜூன் மாதம் வால்பாறை பகுதியில் காயம்பட்ட புலிக்கு உடல் தேறிய நிலையில், பிற புலிகளை போல் வேட்டையாட பயிற்சி அளிக்க வனத்துறை ஏற்பாடு செய்தது. இதற்காக 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. புலிக்கே பயிற்சியா? என வன ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில், இரண்டு யானைகளை பயன்படுத்தியது பேசும் பொருளாக மாறியது.
  • கடந்த மாதம் வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் மூன்று நாட்களாக வைக்கப்பட்டிருந்த சினிரியஸ் கழுகு விமானம் மூலம் ஜோத்பூருக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டது.

இதையும் படிங்க:இலங்கை பயணி விமான நிலையத்தில் உயிரிழப்பு

Last Updated : Dec 28, 2022, 9:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details