தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை- சென்னை வானிலை மையம் - Chennai moderate rain chance

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை
கடலோர மாவட்டங்களில் மிதமான மழை

By

Published : Jan 28, 2022, 2:02 PM IST

சென்னை:தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

30.01.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

31.01.2022, 01.02.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

28.01.2022 அன்று மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:ஞாயிறு முழு ஊரடங்கு நீக்கம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details