தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீயணைப்புத்துறை இணை இயக்குநருக்கு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு! - தீயணைப்புத்துறை இயக்குநர்

Priya Ravichandran: தீயணைப்புத்துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்த என்.பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு அடைந்துள்ளார்.

tamilnadu fire and rescue services Joint Director Priya Ravichandran promoted as an IAS officer
தீயணைப்பு துறை இணை இயக்குநர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 7:45 PM IST

சென்னை: கடந்த 2003ஆம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக பணியில் சேர்ந்தார், என்.பிரியா ரவிச்சந்திரன். பின்னர் இவர் படிப்படியாக பதவி உயர்வு அடைந்து, தற்போது தீயணைப்புத்துறை இணை இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், இவரை ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்த்த தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதை அடுத்து மத்திய அரசு, பிரியா ரவிசந்திரன்-க்கு ஐஏஎஸ் ஆக பதவி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிசந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும், தீயணைப்புத் துறையில் இருந்து ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சேலம் விவசாயிக்கு அமலாக்கத்துறை சாதிப்பெயரோடு சம்மன்.. பின்னணியில் பாஜக பிரமுகரா?

ABOUT THE AUTHOR

...view details