சென்னை:தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக வேலைவாய்ப்புத் துறையில் பதிவுசெய்தவர்கள் குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய அறிக்கையை வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார். கடந்த ஜூலை 31ஆம் தேதிவரை, வேலைவாய்ப்பிற்காகப் பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை, அவர்களின் வயது வாரியான விவரங்கள், மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் போன்றவை அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம், வேலைவாய்ப்பிற்காகப் பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்து 30 ஆயிரத்து 345. அதில், ஆண்கள் - 32 லட்சத்து 93 ஆயிரத்து 401; பெண்கள் - 37 லட்சத்து 36 ஆயிரத்து 687; மூன்றாம் பாலினத்தவர்கள் - 257
வயது வாரியான விவரங்கள்
18 வயத்திற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் - 13 லட்சத்து 25 ஆயிரத்து 333; 19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் - 17 லட்சத்து 88 ஆயிரத்து 12; 24 முதல் 35 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள் - 26 லட்சத்து 27 ஆயிரத்து 948; 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் - 12 லட்சத்து 77 ஆயிரத்து 839; 58 வயதிற்கும் மேற்பட்டவர்கள் - 11 ஆயிரத்து 213.