தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் - மின்சாரத் துறை! - 9 baje 9 ministes

சென்னை: நாளை மின் விளக்குகளை மட்டும் அணைத்து தீபம் ஏற்றுங்கள் என தமிழ்நாடு மின்சாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

tamilnadu electricity board support 9 minites for india
tamilnadu electricity board support 9 minites for india

By

Published : Apr 4, 2020, 5:17 PM IST

கரோனா வைரஸ் தொற்றை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, 130 கோடி மக்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் நோக்கில், நாளை இரவு 9 மணிக்குத் தொடங்கி ஒன்பது நிமிடங்களுக்கு தங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்கு அல்லது டார்ச் அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் வேண்டுக்கோள் விடுத்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சாரத் துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "முதலமைச்சர் ஆணைக்கிணங்க, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அறிவிப்பின்படி, அத்தருணத்தில் மின் கட்டமைப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சாரத் துறை அறிக்கை

இதனால் மற்ற மின் உபகரணங்களை வழக்கம்போல் இயக்கத்தில் வைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது எனத் குறிப்பிட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக மின்சாரம் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் சில நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

ABOUT THE AUTHOR

...view details