தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தல்: அக்.25ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனைக் கூட்டம்..!

Parliament Election 2024: நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக வரும் 25ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன், ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ள இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனைக் கூட்டம்
அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனைக் கூட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 9:31 PM IST

சென்னை: தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்கள், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக திகழ்வதால் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

முன்னதாக அம்மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் தினத்தையும், வாக்குப் எண்ணிக்கை தினத்தையும், கடந்த 9ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வரைவு வாக்காளர்‌ பட்டியல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த தகவலில், "தமிழகத்தில் வருகின்ற 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிட உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் 25ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'லியோ' படத்தின் முதல் டிக்கெட்டை ரூ.1.10 லட்சம் கொடுத்து வாங்கிய ரசிகர்.. காரணம் என்ன?

அந்தவகையில், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் என்ற அடிப்படையில் பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் என்ற அடிப்படையில் திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச் சாவடிகளில், வருகிற நவம்பர் 4,5 மற்றும் நவம்பர் 18,19 ஆகிய தேதிகளில் வாக்காளர்களுக்கான முகாம் நடைபெற உள்ளது என்றும், அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5ஆம் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தலுக்காக தமிழகத்திலிருந்து 43 ஐஏஎஸ் அதிகாரிகளும், 15 ஐபிஎஸ் அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுகவின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் எதற்கு? - அண்ணாமலை சரமாரி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details