தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, இரண்டு கட்டமாக வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தேர்தலின் போதோ அல்லது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.