சென்னை: 01.01.2021 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
புதிய வாக்காளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - சத்தியபிரதா சாகு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6,26,74,446, ஆண்கள்- 3,08,38,473, பெண்கள்-3,18,28,727, மூன்றாம் பாலினத்தவர்- 7,246 அகும்.
01.01.2021 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் அல்லது இணையம் மூலமாக www.nvsp.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்றும், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ‘‘Voter Helpline App" செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.